HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஜல்லிக்கட்டின் சிறப்புகள்

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

 ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டின்  சிறப்புகள்

 காதல், மானம் மற்றும் வீரம் என்ற மூன்றை அடிப்படையாக கொண்டு தான், தமிழனின் வாழ்வு இருக்கிறது.

 இதில் மானம், வீரம் இவற்றை, உயிரை விட மேலாக கருதுகிறான். சங்கத் தமிழில் பார்த்தால், ஒருவனால் செய்ய முடியாத காரியத்தை, வேறொருவன் செய்வதை தான் வீரம் என்று குறிப்பிடுகிறோம்.

 அப்படி செய்பவரை பாராட்டி, வெகுமதி அளித்து கவுரவிக்கிறோம். ஆதி தமிழர்கள், தங்களது வீரத்தை நிரூபிக்க ஜல்லிக்கட்டுதான் முக்கிய களமாக விளங்குகிறது.

 நாணயத்தின் இரு பக்கங்கள் போல தான், பொங்கலும், ஜல்லிக்கட்டும். 200 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமாய் தொடர்ந்து இந்த வீர விளையாட்டு மாடு பிடித்தல், ஏறுதழுவல், ஏறுகோள், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, பொல்லெருது பிடித்தல் என்ற சிறப்பு பெயர்களுடன் காளையோடு சேர்ந்து விளையாடும் வீரவிளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.

 காளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில் (கிரவுண்ட்) விரட்டி விடப்படும்.

 மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு கட்டப்பட்டிருக்கும். மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம். மாட்டின் உரிமையாளரின் வசதிக்கேற்ற பரிசுப் பொருட்களும் விதம் விதமாக இருக்கும்.

 தாரை, தப்பட்டைகள் வாத்திய ஓசைகள் முழங்க காளைகள் சீறிப்பாயும். காளையை அடக்குவதெற்கென்று பல இளைஞர்கள் போட்டி போடுவர்.

வகைகள் :


 சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.

 வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

 வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.

 வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

 ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக, இளைஞர்கள் மது அருந்த மாட்டார்கள்; தினமும் உடற்பயிற்சி செய்வர். அதே சமயம், காளைகளுக்கு, சிறப்பான பயிற்சிகளும், ஊறவைத்த பச்சரிசி, சோளம், வைக்கோல், பேரீச்சை மற்றும் பருத்திக் கொட்டை என, ஊட்டமான உணவுகளும் கொடுப்பார்கள்.


Post a Comment

0 Comments